கொரோனா அச்சுறுத்தலால் சன் டிவி சீரியலை விட்டு விலகும் பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி தொடர்களுக்கென்றே ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் தனி இடம் உண்டு. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தற்போது பழைய எபிசோட் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

தமிழக அரசு அனுமதியளித்ததன் பேரில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளநிலையில் பிரபல நடிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் சீரியல் குறித்து தகவல் பகிர்ந்து வருகின்றனர்.  இதனால் இன்னும் சில நாட்களில் மீண்டும் புது எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்தத் தொடரில் அகிலா என்ற வேடத்தில் நடித்திருந்த மெர்சீனா நீனு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையினால் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும், இதன் காரணமாக தன்னால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு பதிலாக அந்த சீரியலில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress quits Sun TV Serial amid coronavirus outbreak | கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சன் டிவியை விட்டு விலகும் பிரபல நடிகை

People looking for online information on Agni Nakshathiram, Coronavirus, Sun TV will find this news story useful.