பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பாதிக்கு மேல் போட்டியாளர்கள் அப்படியே இருப்பது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைர்ல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தவர் அர்ச்சனா. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பைக் கூட்டும் விதத்தில் வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் கடைசி வாரங்களில் தான் உள்ளே நுழைவது வழக்கம். ஆனால் இந்த முறை வித்தியாசமாக ஆரம்பத்திலேயே அர்ச்சனா மற்றும் சுசித்ரா என இரண்டு போட்டியாளர்கள் நுழைந்தனர்.
அதன்பிறகு தற்போது சின்னதிரை நடிகர் அசீம்மின் வருகைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ச்சனா, ரியோ, நிஷா, ரமேஷ், சோம், கேபி போன்றவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுகின்றனர் என்று கமல்ஹாசன் முன்னிலையில் பாலா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அவர்களும் அவற்றை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீபிரியா தற்போது அர்ச்சனா பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்.
அவர் கூறும் பொழுது "அர்ச்சனா அடிக்கடி சத்தியம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் "போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மேலும், குழந்தைகள் மேலும் சத்தியம் செய்வதை இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று முன்னொரு பதிவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.