சோமிடம் 'அந்த' வார்த்தை சொன்ன அர்ச்சனா... கலாய்த்த பிரபல நடிகைகள்.. குவியும் ரசிகர்கள் ஆதரவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என்ற ராஜதந்திரத்தை பிக்பாஸ் முன்வைத்தார். இதைப் பற்றி பேசும் போது  அனிதா மற்றும் ரியோ இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் அனிதா தேவையில்லாமல் "தைரியமில்லாமல் ஏன் போகிறீர்கள்" என்று வார்த்தையை விட, ரியோ மிகவும் கோபப்பட்டு பேசுவதையும் பார்க்க முடிந்தது.

அதன் பிறகு அனிதா சோமிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, "நான் ரியோவிடம் பேச வேண்டும், அவர் அதற்கான மனநிலையில் இருக்கிறாரா என்று கேட்டு சொல்கிறாயா?" என்பது போல் சொன்னார். உடனே சோமுவும் ரியோவிடம் சென்று "அனிதா உன்னிடம் பேச வேண்டுமாம்" என்பதுபோல் கூறினார். அதற்கு அர்ச்சனா சற்று அநாகரிகமாக "நீ என்ன மாமாவா?" என்பது போல கேட்டார். இது அன்றே ரசிகர்கள் மத்தியில்  விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா இது பற்றி கூறும்பொழுது "தூது போகிறவர்கள் எல்லாம் மாமாவா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் நடிகை கஸ்தூரி கூறும்பொழுது "அனுமன் வகையறா என்று சொல்லாமல் விட்டார்களே" என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

Tags : Anitha, Archana, Som

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress makes fun of archana அர்ச்சனாவை கலாய்த்த பிரபல நடிகைகள்

People looking for online information on Anitha, Archana, Som will find this news story useful.