விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு நிஜத்திலும் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே அவரது காட்சிகளுக்கு பதிலாக தற்போது புதிய காட்சிகள் வைக்க வேண்டிய சூழ்நிலையில் நிகழ்ச்சி குழு இருக்கின்றனர். எனவே தற்போது கண்ணனுக்கு ஜோடி தேடி இருக்கிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல தொடர்களில் நடித்த சத்யசாய் கிருஷ்ணா தற்போது கண்ணனுக்கு ஜோடியாக அறிமுகமாகி உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.