விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பலரது இமேஜ் முற்றிலுமாக மாறி உள்ளது. பலருக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். அப்படியான ஒரு நபர் தான்தீபா. பல காலமாக சினிமா துறையில் இருந்து வந்தாலும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதற்கு முன்பதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வந்தார் தீபா. இயல்பாகவே திறமையான நடிகையான தீபா, தனது வெள்ளந்தியான பேச்சினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் 6-வது விஜய் அவார்ட்ஸ் நடைபெற்றுள்ளது. தனக்கு விருது அளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு வந்திருந்த அவர் தனக்கு விருது வழங்கப்படவில்லை என்பதை அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தார். மேலும் கண்ணீர் மல்க பேசிய அவர் தனக்கு விருது வழங்கப்பட்டால், தனது தாயின் புகைப்படத்தை காட்டலாம் என்று நினைத்து இருந்ததாகவும், தனக்கு விருது கிடைக்காமல் ஓய போவதில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.