உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிது சிறிதாக தளர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர்-நடிகைகள் பலரும் தங்களது திருமண நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகின்றனர்.
மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற சீரியலான கும்பவிளக்கு சீரியலில் நடித்த நடிகை சரண்யாவுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தனது காதலரான மனீஷ் ராஜன் என்பவரை புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்ட அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.