இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் 'முகமூடி' படத்தில் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. அல்லு அர்ஜுன் ஜோடியாக பூஜா நடித்த படம் 'அல வைகுண்டபுரம்லோ' நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹேக்கர்களால் அவருக்கு தேவையில்லாத சிக்கல் உருவாகியுள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்த சிலர் நடிகை சமந்தாவை பற்றி ஒரு பதிவை வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். உண்மையை அறியாத அவர்கள் பூஜா சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டிவிட்டரில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே நடந்த உண்மையை பற்றி பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார் "என் இன்ஸ்டாகிராம் கணக்கின் பாதுகாப்பை நினைத்து கடந்த ஒரு மணிநேரமாக கவலையாக இருந்தது. இந்த நேரத்தில் உடனே உதவி செய்த என் தொழில்நுட்ப குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வழியாக என் இன்ஸ்டாகிராம் கணக்கு எனக்கு கிடைத்துவிட்டது. கடந்த ஒரு மணிநேரத்தில் என் கணக்கில் ஏதாவது மெசேஜ் அல்லது போஸ்ட் போடப்பட்டிருந்தால் அது நீக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இப்படி பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தேவையில்லாத சிக்கல்களும் குழப்பங்களும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.