கடந்த சில நாட்களாக பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே கொரோனாவினால் கவலையில் இருக்கும் மக்களுக்கு இந்த செய்திகள் அவர்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது.
பிரபல போஜ்புரி நடிகை அனுபமா பதக் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 40. மேலும் அவரது வீட்டில் தற்கொலை கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாம். அதில் தனது நண்பர் கேட்டுக்கொண்டதற்கினங்க வியாபாரத்திற்காக பணம் கொடுத்துள்ளார். அது அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை, அவருக்கு தனது பைக்கை கொடுத்துள்ளார். அதுவும் அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை எனறும் கூறப்பட்டுள்ளதாம்.
தற்கொலைக்கு முன் ஃபேஸ்புக் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை உள்ள அந்த வீடியோவில் யாரையும் நம்பாதீர்கள் என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உங்கள் பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், யாரையும் உங்கள் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.