உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்த சூழ்நிலையும் சிலர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது சமீபத்தில்கூட நடிகை வித்யுலேகாவின் எடைக்குறைப்பு புகைப்படம் வைரலானது. இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகள் ரயானே தனது புதிய படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்த போட்டோவையும் தற்போது இருக்கும் போட்டோவையும் அவர் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த லாக்டவுன் நேரத்தில் உடற் பயிற்சிகள் மூலம் தனது எடையை வெகுவாக குறைத்து வேற லெவல் மாற்றத்தை அடைந்துள்ளார். இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே என்பதற்கு இதுவும் ஒரு சான்று.