பிக்பாஸ் வீட்டில் இன்று அர்ச்சனா மற்றும் பாலா இடையே மிகுந்த சண்டை ஏற்படுகிறது. அதற்கு ஆதரவாக ரியோ, நிஷா, வேல்முருகன் போன்ற பலரும் ஆதரவாக நிற்பதைக் காணமுடிகிறது, இதனையடுத்து நேற்றைய தினம் பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அவர் கூறும் பொழுது "பிக்பாஸில் ஒருவர் இனிமே எனக்கு என்ன. நிஷாவுக்கு, ரியோவுக்கு, வேலுவுக்கு ஏதாவதுனா, மட்டும்தான் நான் வருவேன் என்று கூறுகிறார். அதற்கு அர்த்தம் என்ன?" என்று கேட்கிறார். இதற்கு கமெண்டில் பலரும் இதற்கு பெயர் தான் குரூப்பிஸம் என்று பதில் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் அவர் மறைமுகமாக அர்ச்சனாவை தான் சொல்கிறார் என்று தெரிகிறது.