குழந்தை பெற்றுக்கொள்ள இருந்த நடிகை... கொரோனாவால் முடிவை மாற்றி கொண்டாராம்... யார்னு பாருங்க...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் பிரபல காமெடியனாக இருப்பவர் பார்தி சிங். இவர் எழுத்தாளர் ஹர்ஷ் லிம்பச்சயா என்பவரை  கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதனையடுத்து 2020-ல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்த தம்பதியினர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனராம். இதுபற்றி அவர் கூறும்போது "நான் 2020-ல் தாயகலாம் என்று முடிவெடுத்து இருந்தேன். உண்மையில் நானும் அவரும் எங்கள் குடும்பத்தை விரிவுபடுத்தலாம் என்று இருந்தோம். ஆனால் இப்பொழுது இருக்கும் கொரோனா வைரஸால் அந்த ரிஸ்கை எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் ஒரு குழந்தையின் உயிருடன் விளையாட நான் விரும்பவில்லை. கர்ப்பம் ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவது கூட கடினமாக இருக்கும். எங்கள் குழந்தை சமாதான பூமியில் பிறக்க ஆசைப்படுகிறேன். எனவே ஒரு வருடம் கழித்து குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். இந்த கொரோனாவால் இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

குழந்தை பெற்றுக்கொள்ள இருந்த நடிகை கொரோனாவால் மாற்றம்Popular actress changes her decision to get pregnant due to coronavirus

People looking for online information on Barti Singh, Corona, Covid19, Pregnant will find this news story useful.