பிரபல நடிகை விவசாயிகள் போராட்டம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதனிடையே நேற்று பிரபல பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா காலிஃபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து பல்வேறு இந்திய பிரபலங்களும் கிரிக்கெட் நட்சத்திரங்கள், இந்தியாவின் பிரச்சனைகளின் வெளியில் இருப்பவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, பங்கேற்பாளர்கள் இல்லை என கருத்து தெரிவித்தனர்.
மேலும் பிரபலங்களின் இந்த கருத்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் தற்போது நடிகை டாப்ஸி இவ்விவகாரம் குறித்து தனது அதிரடி கருத்தை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ''ஒரு ட்வீட், ஒரு நகைச்சுவை, ஒரு நிகழ்ச்சி உங்களின் மொத்த நம்பிக்கையின் மீது சலசலப்பை ஏற்படுத்துகிறது என்றால், உங்கள் மதிப்பு முறையை வலுப்படுத்த வேண்டியது நீங்கள்தான். மாறாக யாருக்கும் பிரச்சார பாடம் எடுக்க தேவையில்லை'' என தெரிவித்துள்ளார். டாப்ஸியின் இந்த கருத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.