தமிழ் பிக்பாஸ் சீசன் 4: பிரபல நடிகையை ரூ.1 கோடி ஆஃபருடன் அனுகிய பிக்பாஸ் டீம் - செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூன்று சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அதில் பங்கேற்ற நட்சத்திரங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தலால் 4வது சீசன் நடக்குமா என்ற சந்தேகம் பார்வையாளர்களிடேயே இருந்தது.

இதன் ஒரு பகுதியாக தெலுங்கு, ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் புரொமோ வெளியாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதன் படி சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் புரொமோ வெளியானது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' பட கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்தை ரூ.1 கோடி ஆஃபருடன் பிக்பாஸ் டீம் அனுகியதாகவும் தற்போது ஷில்பாவின் டீம், பிக்பாஸ் 4 டீமுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போ ஷில்பா மஞ்சுநாத் கலந்துகொண்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி கலைகட்டப்போவது உறுதி.

Popular Actress approached by Bigg Boss 4 tame with huge amount | பெரிய தொகை ஆஃபருடன் பிரபல நடிகையை அனுகிய பிக்பாஸ் சீசன் 4 டீம்

People looking for online information on Bigg Boss 4, Shilpa Manjunath will find this news story useful.