தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு மலையாளத்தில் 'பிரேமம்' என்ற படத்தில் நடித்தார். இந்தியாவில் இருக்கும் பிற மொழி ரசிகர்களை மலையாள படங்களின் பக்கம் திரும்பியதில் பிரேமம் படத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் காதல்களை அழகாக வெளிப்படுத்தி இருந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நயன்தாரா ஜோடியாக 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர் நிவின் பாலி தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மகனின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த அவர் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் மகனே" என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தின் கீழ் குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.