கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் திரையுலக பிரபலங்கள் பலரும் மக்களுக்கு நம்பிக்கை தரும் பதிவுகளை எழுதி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'பையா', 'அலெக்ஸ் பாண்டியன்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தவர் மிலிந்த் சோமன். இவர் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா தண்டால் எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ''ஜூலை 3, 2020-ல் தனது 81வது பிறந்த நாளை எனது அம்மா கொண்டாடினார். 15 தண்டாலுடன் பார்ட்டி, பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Milind Soman