கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாடுகளில் அதிக அளவில் உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் தற்போது அச்சுறுத்துலை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி என பிரபலங்களும் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இதுகுறித்து பிரபலங்கள் அவ்வப்போது விழிப்புணர்வு பதிவுகளை எழுதி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, 'கிரேஸி ரிச் ஏசியன்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஃபிலிப்பினோ மற்றும் அமெரிக்க நடிகர் நிகா சன்டோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தந்தை டிடோ சோனி நேற்று கொரோனா வைரஸ் காரணமாக மரணித்துள்ளார். அவர் நல்ல அன்பான மனிதர். எனது அம்மாவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எங்கள் குடும்பம் சிதைந்துள்ளது. என்னால் என் அப்பாவின் இறுதி நாட்களில் கூட இருக்க முடியவில்லை. எங்கள் அம்மா எனது அப்பாவிற்காக வருந்தும் அவரது கையைப்பிடித்து ஆறுதல் சொல்ல முடியவில்லை. எங்கள் சகோதரர்களின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைக்க முடியவில்லை.
இந்த கடினமான நேரத்தில் எங்களு்க்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டவர்கள், உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல எனது அம்மாவக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.