பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஆலியா என்ற மகள் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா சமீபத்தில் உள்ளாடைகள் அணிந்து பல புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் அவருக்கு மோசமான கமென்ட் அடித்ததும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பற்றியும் அவர் தற்பொழுது பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது "கடந்த சில வாரங்களாக நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். என்று அந்த உள்ளாடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டேனோ. அன்றிலிருந்து எனக்கு மிகவும் மோசமான அருவருக்கத்தக்க கமெண்ட்டுகள் வருகின்றது. மிகவும் பயந்து போய் உள்ளேன். இன்ஸ்டாகிராமை டெலிட் செய்து விடலாமா என்று யோசிக்கிறேன். முதலில் இந்த பாலியல் சீண்டல்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால் இவற்றைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான கமெண்ட்டுகள் தான் பிற்காலத்தில் கற்பழிப்பு, பாலியல் சம்பவங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. நான் இப்படிப்பட்ட கமெண்ட்டுகளை பார்த்து வளர்ந்திருக்கிறேன் மேலும் நான் சிறுவயதில் இருந்த பொழுது நடுத்தர வயதுள்ள ஒரு மனிதரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். இதே ஆண்கள் தான் நான் பதிவிடும் பதிவுகளை பார்க்கின்றனர் ஆனால் அவற்றை பார்த்துவிட்டு என்னை பாலியல் ரீதியாகவும் சிந்திக்கின்றனர் உங்களுக்கு எனது பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் என்னை தயவு செய்து பின் தொடர்ந்தார்கள் ஆனால் இங்கு பதிவிடும் எதுவும் பாலியலுக்கான அழைப்பு இல்லை இது என்னுடைய உடல் எனக்கு இது என்ன வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.