இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நித்தி அகர்வால், பாரதிராஜா, பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஈஸ்வரன்'. இப்படத்தின் டீசர் இன்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் முழு நீள ஆக்ஷன் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு "சிவ சிவா" என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் மீனாட்சி நாயகியாக நடிக்கிறார்.

சத்ரு, சரத், ஜே.பி., காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் பிரின்ஸ், அருள்தாஸ், இயக்குனர் முக்தர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜெய். தற்போது படத்தின் வேலைகளில் மூழ்கி இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், காசி விஸ்வநாதன் எடிட்டர், கலை இயக்குநராக சேகர், ஷோபி பால்ராஜ் ஆகியோர் நடன இயக்குனராகவும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.