கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 3 மாதங்களுக்கு மேல் உள்ள ஊரடங்கு சாமான்யர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களின் இயல்பு வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் நடிகர்கள் பலர் காய்கறிகள் விற்பது போன்ற வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியைடைய செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தனஹா (Thanaha) உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்திருந்தவர் சுதீஷ் அன்சேரி (Sudheesh Ancherry). இவர் நாட்டுப்புற பாடகர் மற்றும் மிமிக்ரி கலைஞரும் கூட. மேலும் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது திரைப்படங்களின் படப்பிடிப்பு இல்லாததாலும், பள்ளிகள் திறக்கப்படாததாலும் தனது வாழ்வாதார தேவைகளுக்காக மீன் விற்கும் தொழில் செய்து வருகிறார். மீன் பிடிக்கும் படி இருக்கும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.