"அயலி டைரக்டர் மேல எனக்கு வருத்தம் தான்".. பிரபல நடிகர் TSR ஸ்ரீனிவாசன் ஷேரிங்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் வெளியாகி இருந்த வெப் சீரியஸ் தொடர் 'அயலி'. முத்து குமார் இயக்கி இருந்த இந்த தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம், பெண்களின் கல்விக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த வெப் சீரியஸ் தொடர் அமைந்திருந்தது தான். தமிழில் வெளியான சிறந்த தொடர் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

அயலி தொடரில், அபி நக்ஷத்ரா, அனுமோள், மதன், லிங்கா, சிங்கம் புலி, TSR ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். Estrella Stories தயாரிப்பு நிறுவனம் சார்பாக, குஷ்மவதி இந்த தொடரை தயாரித்துள்ளார். மேலும் இந்த தொடரின் திரைக்கதை மற்றும் வசனத்தை வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்து குமார் ஆகியோர் எழுதி உள்ளனர். ரேவா இசையமைத்த இந்த தொடர், Zee 5 தளத்தில் வெளியாகி இருந்தது.

அயலி தொடரில் வரும் வசனங்களும், தொடரை சுற்றி வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அதிகம் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதே போல, பள்ளி ஆசிரியராக நெகடிவ் கலந்த ஒரு காமெடி கதாபாத்திரத்தில் வந்து பலரது அப்ளாஸையும் அள்ளி இருந்தார் நடிகர் TSR ஸ்ரீனிவாசன்.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், Behindwoods நேயர்களுக்காக பிரத்தியேக பேட்டி ஒன்றை நடிகர் TSR ஸ்ரீனிவாசன் அளித்துள்ளார். அப்போது தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீனிவாசன், அயலி உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்த அனுபவம் பற்றியும் பேசி இருந்தார்.

அப்போது, தான் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பது பற்றி பேசிய TSR ஸ்ரீனிவாசன், அயலி தொடரில் நடித்த போது நடந்த சம்பவம் குறித்து பேசுகையில், "அயலி தொடர்ல கேரக்டரில் நான் பெருசா நடிக்கவே இல்லை. என்கிட்ட கதையே சொல்லல. எனக்கு படம் பார்க்கும் போது தான் கதையே தெரியும். அயலிக்காக ஒரு 25 - 30 நாள் நான் நடிச்சிருக்கேன். நான் நெகட்டிவ் ரோல் பண்றது கூட எனக்கு தெரியாது. சீன் பை சீன் டைரக்டர் குடுத்தாரு.

அந்த தமிழ்செல்விங்குற கேரக்டரை தான் நான் டார்கெட் பண்ணனும், அவங்க படிக்க கூடாது. ஊர் பெருமையை காப்பாத்தணும், இதுதான் என்னோட டார்கெட். ஆனா கதை தெரியாம அந்த HM -அ போய் நான் டார்கெட் பண்ணுனேன். நான் அவங்கள ரொம்ப டார்ச்சர் பண்ணேன். கதை தெரிஞ்சுருந்தா அது கரெக்ட்டா பண்ண முடியும். அதனால எனக்கு டைரக்டர் மேல வருத்தம் தான். முழு கதையை சொல்லியிருந்தார்னா, அந்த தமிழ் செல்வி கேரக்டரை பள்ளிக்கூடம்ன்னு நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருப்பேன்" என்றும் TSR ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

"அயலி டைரக்டர் மேல எனக்கு வருத்தம் தான்".. பிரபல நடிகர் TSR ஸ்ரீனிவாசன் ஷேரிங்ஸ்!! வீடியோ

Popular actor TSR Srinivasan about ayali web series exclusive

People looking for online information on Ayali, TSR Srinivasan will find this news story useful.