பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு... "இந்த டம்மி பீஸ்களை எல்லாம் எலிமினேட் பண்ணுங்க.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பிரபல நடிகரான பரத் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது "சீக்கிரம் பிக்பாஸில் இருந்து அனைத்து டம்மி பீசுகளையும் வெளியேற்றி விடுங்கள். அவர்களிடத்தில் எந்த ஒரு கண்டன்டையும் நான் பார்க்கவில்லை" என்று பதிவிட்டு விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.

பரத்தின் இந்த பதிவிற்கு கீழே கமெண்ட் செய்துள்ள நடிகர் பிரேம் ஜி, "நாம் இருவரும் உள்ளே செல்லலாமா" என்று கூறியிருந்தார். அதற்கு பரத் "நீங்கள் போக விரும்புகிறீர்களா" என்று கேட்க, அதற்கு பிரேம்ஜி "உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே" என்று பதிவிட்டிருக்கிறார். அதேபோல பரத்தின் இந்தப் பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் யார் அந்த டம்மி பீஸ் என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு... "இந்த டம்மி பீஸ்களை எல்லாம் எலிமினேட் பண்ணுங்க.." வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor troll post on some biggboss contestant

People looking for online information on Bharath, Biggboss will find this news story useful.