பரபரப்பாக சுற்றித்திரிந்த மக்களை கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வீட்டிலேயே முடக்கிப் போட்டுள்ளது. அது அவர்களுக்கு பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வீட்டிலேயே இருப்பதால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 'நேரம்', 'பிரேமம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தவர் கிருஷ்ணா சங்கர் தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் ஃபோட்டோவை பகிர அது வைரலாகி வருகிறது.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 60 கிலோவில் இருந்து 84 கிலோவிற்கு மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தொபமா (Thobama) படத்துக்காக இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. அதற்கு சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளி கிச்சு சேட்டா என்று கமெண்ட் செய்துள்ளார்.
Tags : Krisna Sankar, Aparna Balamurali