சமீப காலமாக திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதித்து வருவது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியான தகவல்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இசைஞானி இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவர் நலம் பெற வேண்டி கருத்து தெரிவித்தனர். அவரது மகன் எஸ்.பி.சரண் எஸ்பிபியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனாவில் இருந்து குணமானது தெரியவந்தது. இதனையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்களும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.