பா.இரஞ்சித் தயாரிப்பில் அடுத்தப்படம்.. செம போஸ்டருடன் அறிவிப்பு.. ஹீரோ யார் தெரியுமா.??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தற்போது ஆர்யா நடிப்பில் சார்பட்டா திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இவர் சினிமா தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

பரியேறும் பெருமாள், குண்டு உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பில் குதிரை வால், ரைட்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். 

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் இப்படத்திற்கு பொம்மை நாயகி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்றுடன் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் போஸ்டர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு | Popular actor teams up with pa ranjith for his next production venture

People looking for online information on Bommai Nayagi, Pa Ranjith, Yogi Babu will find this news story useful.