அரக்கர்கள் டாஸ்க்கில் பல இடங்களில் சுரேஷ், சனம் ஷெட்டியை தகாத வார்த்தைகளினால் பேசினார். இது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் சனம் மிகவும் மவுனம் காத்தார்.

இந்நிலையில் தினம், சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால் தாக்குவதையும். அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து பேசுவதையும் காண முடிந்தது. சுரேஷின் இந்த வெறுக்கத்தக்க செயலை ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதன் பின்னர் பிக்பாஸிடம் சென்று கதறி அழுதார். இந்நிலையில் நடிகர் கவின் தற்போது தனது டிவிட்டர் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் அதில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவு தெரிவிப்பது போல "அவருக்கு சக்தி கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.