கொரோனாவால் வேலையிழந்து காய்கறி விற்கும் பணி வழங்கிய நடிகர் - ரசிகர்கள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வில்லனாக மிரட்டி வருபவர் நடிகர் சோனு சூட். தொடர்ச்சியாக எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதால் கடந்த சில மாதங்களாக இவரது பெயர் செய்திகளில் அடிக்கடி இடம் பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த உன்தாதி சாரதா என்ற பெண்ணுக்கு கொரரோனா காரணமாக வேலையிழந்துள்ளார். அவர் குடும்பத்துக்கு வேறு வருமானம் இல்லாததால் தற்போது காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைளங்களில் வைரலானது. எனது அலுவலர்கள் சாரதாவை சந்தித்தார். நேர்காணல் முடிந்தது. பணி உத்தரவு கடிதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தி வருகின்றனர்.
 

Tags : Sonu Sood

Popular actor Soonu Sood offers job to software engineer who was fired due to Covid crisis | கொரோனாவால் வேலையிழந்த பெண்ணுக்கு பணி வழங்கிய நடிகர் சோனு

People looking for online information on Sonu Sood will find this news story useful.