நாள்தோறும் கொரோனா குறித்த செய்திகளை கேட்டு மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக 'தப்பட்' உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்த அன்குர் ரதிக்கும் ( Ankur Rathee) அவரது நீண்ட நாள் காதலி அனுஜா ஜோஷிக்கும் கடந்த ஜூலை 19 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் அன்குர் தனது நிச்சயார்த்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலாகியது. இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags : Ankur Rathee