''TRP-க்காக தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க விரும்பல'' - பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் புரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ஒருவருக்கு பிக்பாஸ் அழைப்பு வந்து அதனை அவர் நிராகரித்திருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஜெயின் இமாம் என்ற நடிகர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது குறித்தும், அதனை தான் நிராகரித்தது குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், ''இது பிக்பாஸில் கலந்துகொள்வதற்கு எனக்கு சரியான நேரம் இல்லை. நான் மிகப்பெரிய வாய்ப்புகளை நோக்கி கவனம் செலுத்தியுள்ளேன்.  எனக்கு கேமரா பிடிக்கும். சரியான காரணத்துக்காக 100 கேமாராக்கள் என்னை படம் பிடித்தால் பிரச்சனையில்லை. ஆனால் TRP-க்காக தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor rejects bigg Boss offer ft Zain Imam | பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்

People looking for online information on Bigg boss, Zain Imam will find this news story useful.