பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் நாமினேஷனில் ஆரி பாலாவுக்கு நாமினேட் செய்து 'காதல் அவர் கண்ணை மறைக்கிறது' என்று கூறினார். இதுபற்றி பிக்பாஸ் கூற, பாலாஜி கோபம் அடைந்து அனைவரையும் மோசமாகப் பேசினார். ரியோ மற்ற போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, பாலா நம்மை பார்த்து "காது கிழிந்து விடும்" என்று கூறியதாக கூறினார். அதற்கு ரியோ" அசிங்கமா ஒருத்தன் சொல்லிட்டு போனா, என் குடும்பத்துக்கு வலிக்காதா" என்பது போல் கூறி கோபமடைந்தார். பின்பு வேகமாக கண்ணாடியையும் அடித்தார்.
இந்நிலையில் பிரபல நடன அமைப்பாளரும், நடிகருமான சதீஷ் அதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "பாலாவுக்கு அருகிலிருந்தவர்களுக்கே கேட்கவில்லை, ரியாவுக்கு கேட்டு விட்டதாம். குடும்பம் பார்க்கிறார்கள் என்பதுதான் அவருக்கு ஒரே கவலையா இருக்கு. அப்படி சொன்ன ஆரியே சும்மா இருக்காரு, ரியோ ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும். விட்டா மெண்டல் ஆகிடுவாங்க போல. எதற்கு இந்த தேவை இல்லாத கோப சீன். பேமிலி பாக்குறாங்க அவங்க பீல் பண்ணுவாங்கன்னா ஏன் பிக்பாஸ் வந்தீங்க? புரியவில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.