விஷால் - ஆர்யா இணையும் திரைப்படம் குறித்து அதிரடி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு எனிமி (Enemy) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மினி ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் ஹைதராபாத்தில் இப்படத்திற்காக பிரமாண்டமாக பாடல் ஷூட்டிங் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது எனிமி திரைப்படம் குறித்து ஒரு செம மாஸ் தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் இணைவதாக அறிவிப்பு வந்துள்ளது.
தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களை எப்போதுமே கவர்ந்து வரும் பிரகாஷ் ராஜ் எனிமி படத்தில் நடிப்பது, மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.