பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் பங்கேற்கும் பிரபல நடிகர்?.. வைரலான தகவல்... அவர் வெளியிட்ட பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வந்த நிலையில் கடுமையான ஊரடங்கினால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக மீண்டும் திரும்பியது பிக்பாஸ். இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி  முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிக்பாஸில் ஆட்கள் தேர்வு தற்போது துரிதமாக நடந்து வருகிறது. அதில் வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் பிரபல நடிகர் மற்றும் பாடகரான நகுல் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றும், அதற்காக பிக்பாஸ் குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது என்றும் ஒரு செய்தி மிகவும் வைரலானது. அண்மையில் தான் நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது . இதனையடுத்து இதற்கு தற்போது அவர் பதில் அளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "பிக்பாஸ் குழுவில் இருந்து என்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. அப்படியே தொடர்பு கொண்டாலும் என் தங்க மகளை  விட்டு என்னால் இருக்க முடியாது. நிச்சயமாக முடியாது" என்று பாசத்துடன் கூறியுள்ளார்.

Tags : Nakul

Popular actor in biggboss five? பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் பங்கேற்கும் நடிகர்?

People looking for online information on Nakul will find this news story useful.