தமிழ் நடிகருக்கு லாக்டவுனில் எளிமையாக நடைபெற்ற திருமணம் - வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எப்பொழுதும் கோலாகலமாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட வீட்டு விசேஷங்கள் கூட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் எளிமையாக நடைபெற்று வருகிறது. தவிர்க்க முடியாத நிகழ்வுகள் என்பதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நட்சத்திர அணிவகுப்புடன் வெகு விமர்சையாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கூட குறைவான பங்கேற்பாளர்களுடன் அவரவர் வீடுகளிலேயே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் ராணாவின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் மூலமாக வாழ்த்து தெரிவிக்கும் சூழல் இருப்பதை காண முடிந்தது.

இந்நிலையில் அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பரத் ராஜிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Popular Actor got married, pics goes Viral ft Adanga Maru, Bharat Raj | பிரபல தமிழ் நடிகருக்கு லாக்டவுனில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

People looking for online information on Bharat Raj, Marriage will find this news story useful.