உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மே மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை எளிமையாக கொண்டாடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் கோகுலன் தனது திருமணத்தை கோவிலில் எளிமையாக நடத்தியுள்ளார்.
குடும்பத்தினர் முன்னிலையில் நடிகர் கோகுலன், தன்யா என்பவரை எர்ணாகுளம் கோவிலில் கரம் பிடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர் 'புண்ணியலன் அகர்பத்தீஸ்' படத்தில் ஜம்புராட்டன் என்ற கேரக்டரில் நடித்த ரோல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் உடைக்கு மேட்சாக மாஸ்க் அணிந்து மணமக்கள் கொடுத்த போஸ் தற்போது வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.