பிரபல வில்லன் நடிகர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் மிதுன் சக்ரவர்த்தி. தனது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பால் இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் ஹிந்தி மட்டுமின்றி பல்வேறு மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் தமிழில் யாகாவராயினும் நா காக்க என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இத்திரைப்படத்தில் ஆதி ஹீரோவாகவும், நிக்கி கல்ராணி கதாநாயகியாகவும் நடித்தனர்.
இந்நிலையில் தற்போது மிதுன் சக்ரவர்த்தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறது. இத்திரைப்படத்தை விவேக் அக்னி ஹோத்ரி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபுட் பாய்சன்தான் இதன் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குநர் ஷூட்டிங்கை கேன்சல் செய்துள்ளார். ஆனால், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மீண்டும் அடுத்தநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, முழு எனர்ஜியுடன் நடித்து கொடுத்துள்ளாராம்.