2020ஆம் வருடத்தில் பல கொடுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயல்பான வாழ்க்கைக்கு முதல் எதிரியாக நுழைந்தது கொரோனா வியாதி. அதே போல் திரைத்துறை பிரபலங்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் என்னவென்றால், பரவை முனியம்மா, சேது, வடிவேல் பாலாஜி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ஆண்டு தான் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அருண் அலக்ஸாண்டர் மாரடைப்பால் காலமானார். 48 வயதான இவர், டப்பிங் கலைஞராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த சினிமா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.