பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் வெளியிட்ட போட்டோ வைரல்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மலையாள சினிமாவில் இளம் நடிகராக பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அர்ஜுன் அஷோகன். நடிகர் ஹரிஶ்ரீ அசோகனின் மகனான இவர், பரவா, ஜூன், வரதன், உண்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் அஷோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை பகிர்ந்துள்ள இவர்,''எங்கள் இளவரசி வந்துவிட்டாள்'' என பதிவிட்டுள்ளார்.

மேலும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவையும் இந்த பதிவுடன் அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, பல்வேறு திரைத்துறை நட்சத்திரங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்தது | popular actor blessed with baby girl shares viral photo

People looking for online information on Arjun Ashokan will find this news story useful.