நடிகருடன் நடைபெற்ற நிச்சயதார்த்த ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒருபுறம் கொரோனா பிரச்சனைகள் இருந்தாலும் தவிர்க்க முடியாத திருமண நிகழ்வுகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் எளிமையாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் வீட்டு விஷேங்கள் கூட நெருங்கிய உறவினர்களுடன் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

ஒரு அடார் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரோஷ்னா அன் ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நீண்ட நாள் காதலர் கிச்சு டெல்லஸ் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்துள்ளார்.

கிச்சு டெல்லஸ் மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்குகிறார் இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular actor and Actress got engaged ft Roshna Ann Roy and Kichu Tellus | நிச்சயதார்த்த ஃபோட்டோ பகிர்ந்த பிரபல நட்சத்திர ஜோடி

People looking for online information on Roshna Ann Roy will find this news story useful.