பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் திடீரென மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது மிகவும் வைரலாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் தந்தையாக நடித்து வந்தவர் புகழ்பெற்ற நடிகர் வெங்கடேசன். தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வெங்கடேசன் தற்போது மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சோகம் நீங்கும் முன்பே   மீண்டும் ஒரு நடிகர் மரணம் அடைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை விஜய் டிவி நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன் கூறும்பொழுது "நான் உடன் பணியாற்றியவர்களில் மிகவும் அற்புதமான சிறந்த நடிகர் மற்றும் மனிதர். இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் அப்பா" என்று வேதனையுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பல விஜய்டிவி பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Venkatesan

தொடர்புடைய இணைப்புகள்

Popualr vijay tv serial actor dies விஜய் டிவி சீரியல் நடிகர் மரணம்

People looking for online information on Venkatesan will find this news story useful.