இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். குழந்தை வளர்ப்பில் அன்னைக்கு சமமாக தந்தையின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருக்கிறது. பலரது வெற்றிக்குப் பின்னால் சத்தமில்லாமல் உழைத்த தந்தை இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

சினிமா உலகிற்குள் வந்த கொஞ்ச வருடங்களிலேயே முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இளம் வயதிலேயே தேசிய விருது வாங்கிய பெருமையையும் பெற்றுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடித்த பென்குயின் படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.