பிக்பாஸ் நான்காம் சீசன் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே பலரும் சந்தேகப் பார்வையுடன் பார்த்த ஒருவர் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆனால் இன்று லட்சக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார். வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் கேப்ரியல்லாவுக்காக தனி ஆளாக நின்று, கடைசிவரை போராடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர், நடிகர் சிவகுமார் தனது டிவிட்டர் தளத்தில் அவரைப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "சுரேஷ் சக்ரவர்த்தி வேற ரகம், தலைவர் உண்மையிலேயே வேற மாதிரி, இந்த சீசனில் சுவாரசியம் மிக்க ஒரே ஒரு நபர். ஒரு மனிதர் இதை விடாதா எதார்த்தமாக எப்படி இருக்க முடியும். வேல்முருகன் கட்டிப்பிடி வைத்தியம்" என்று பதிவிட்டுள்ளார்.
Tags : Shiv kuamr, BIGGBOSS TAMIL, Suja, Suresh