பிரபல நடிகருக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2013-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" இந்த திரைப்படத்தில் ஹீரோயின் நந்திதாவின் நண்பராக நடித்தவர் சித்தார்த் விபின். அந்த படத்தின் இசையமைப்பாளரும் அவர்தான்.அந்த ஒரு காட்சியின் மூலமாகவே நல்ல புகழ் பெற்றார். அதற்க்கு பிறகு  நடிகராக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுகிறேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக பிரபலமான அவர் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் என்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் இசையமைப்பாளராக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஜாக்சன்துரை, ஹலோ நான் பேய் பேசுகிறேன், முத்தின கத்திரிகா, ஜுங்கா, திருமணம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் விபின் நேற்றையதினம் ஸ்ரியா என்ற மணமகளை கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்டார். புதுமணத் தம்பதியரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

Popualr actor ties knot fans share wishes பிரபல நடிகருக்கு திருமணம் முடிந்தது

People looking for online information on Siddharth Vipin will find this news story useful.