VIDEO: 'பூவே பூச்சூடவா' சீரியல் நடிகையின் 'புதிய தொடர்'... பிரபல சேனலில் ஆரம்பம்.. வைரல் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டின் டாப் சீரியல்என்று பெயர் வாங்கியிருந்தது. இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பலரையும்  கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் காதலிக்கும் விஷயத்தையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதையும் சமீபத்தில் அறிவித்துள்ளனர். மேலும் ஜோடியாக பொது நிகழ்ச்சிகளுக்கும் வருகின்றனர்.

மேலும் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெகு சில சீரியல்களில் இந்த சீரியலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ரேஷ்மா ஹீரோயினாக நடிக்கும் புதிய சீரியல் பற்றிய அறிவிப்பு  வெளியாகியுள்ளது. ஆனால் ஜீ தமிழில் இல்லை கலர்ஸ் தமிழில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். அந்த சீரியலுக்கு அபி டெய்லர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயருக்கேற்றார் போலவே டெய்லராக வரும் ரேஷ்மா புரோமோவிலேயே பலவகையான உடைகளின் வடிவமைப்புகளை சொல்லி அசத்துகிறார். இந்நிலையில் இத்தொடரின் ப்ரோமோ வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:

பூவே பூச்சூடவா சீரியல் நடிகையின் புதிய தொடர் | Poove Poochoodava Reshma's next serial Abhi Tailor TRAILER Video goes viral

People looking for online information on Poove Poochoodava, Reshma Muralidharan will find this news story useful.