ஷாக் ஆன ரசிகர்கள்.. முடிவுக்கு வந்த “பிரபல” ஜீ தமிழ் சீரியல்! நடிகர்கள் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2020, செப்டம்பர் மாதம் பிரபல சீரியலான சூரியவம்சம் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக அந்த சீரியலின் நடிகர்கள் நடிகர்கள் நித்யா ராஜ், கரோலின் ஹில்ட்ரூட், மிதுன் ராஜ், அனிதா வெங்கட் என பலரும் மிகவும் எமோஷனலாக பகிர்ந்துள்ளனர்.

பிரபல ஜீ தெலுங்கு தொடரான 'அமெரிக்கா அம்மாயி' என்ற சீரியலை மையமாக வைத்து தமிழில் கே. கார்த்திகேயன் இயக்கத்தில் பூர்ணிமா பாக்யராஜ், நிகிதா ராஜேஷ் மற்றும் ஆஷிஷ் சக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சூர்யவம்சம்.

இந்த சீரியல் தான் தற்போது முடிவடைய போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சீரியலின் கடைசி எபிசோடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள்  "சீரியலின் கடைசி நாள்", "மிஸ்ஸிங் சூர்யவம்சம் குழு (sic)" , "கடைசி நாள் படப்பிடிப்பில்" , "சூர்யவம்சத்தில் இருந்து எங்கள் கடைசி ரீல்கள்." என்று தங்களது சமூக வலைதளங்களில் உருக்கமாக பகிர்ந்துள்ளனர்.

இந்த சீரியலில் நிகிதா ராஜேஷ் (சமந்தா ஆக சாம்), ஆஷிஷ் சக்ரவர்த்தி (சூர்யா), பூர்ணிமா பாக்யராஜ் (அன்னபூரணி என அன்னம்மாள்), நித்யா ராஜ் (சமன்யாவாக), அனிதா வெங்கட் (ராஜி), கரோலின் ஹில்ட்ரூட் ஜெயந்தி), மிதுன் ராஜ் (அபிஷேக்) மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த சீரியலில் அன்னபூரணியாக நடிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், தனது மகள் கல்யாணி, அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்ததற்காக குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்க, 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்யாணியின் மகள் சமந்தா, தனது தாய்வழி குடும்பத்துடன் தம் அம்மாவை இணைக்க முயற்சிப்பதாக இந்த சீரியலின் கதை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கலர்ஸ் தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியலில் வள்ளியம்மை எனும் கேரக்டரில் பூர்ணிமா நடிக்கவுள்ளார்.

இந்த சீரியலில் மீனாட்சியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் (ஹீரோயின்) நடிக்க, சிதம்பரமாக (ஹீரோ) நடிகர் ‘லொள்ளு சபா’ ஜீவா நடிக்கிறார். இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

Also Read: "செம்ம.. மாஸ்".. புதிய திரைப்படத்தில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. Viral ஆகும் Shooting ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Poornima Bhagyaraj zeetamil serial to end actors emotional

People looking for online information on Poornima Bhagyaraj, SerialActress, Suryavamsam, TamilSerialUpdates, Trending, TVActress, TVSerial, ZeeTamil will find this news story useful.