குடும்பத்தோடு கேக் வெட்டி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பூர்ணா 😍.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூர்ணா, தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக குடும்பத்துடன் கேக் வெட்டி அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "அப்பாவோட போய் 'கில்லி' படம் பார்த்தேன்.. அதுக்கப்புறம்".. ராஷ்மிகாவின் 'தளபதி Fan Girl' மொமண்ட்ஸ்..!

பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.  ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.

அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் பூர்ணா நடித்துள்ளார்.

தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.

கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு வாக்கெடுப்பு நடத்தியும் உள்ளார். சிலர் ஆண் என்றும் சிலர் பெண் என்றும், ஒருவர் இரட்டை குழந்தைகள் என்றும் பதில் அளித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் தனது கணவர்‌ சானித் ஆசிப் அலியுடன் உணவு உண்ணும் புகைப்படத்தையும் பூர்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | "தில்'லுக்கு துட்டு.. தயாரிப்பாளர் தில் ராஜூ.. வாரிசு - 2 எப்போ Sir ?".. விஜய் Fun Speech 😅

குடும்பத்தோடு கேக் வெட்டி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பூர்ணா 😍.. வைரல் போட்டோஸ் வீடியோ

Poorna Shamna Kasim Announced Her Pregnancy

People looking for online information on Shamna Kasim, Shamna Kasim Announced Her Pregnancy will find this news story useful.