நடிகை பூர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

Also Read | அட.. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அப்பவே நடித்துள்ள சுந்தர் C.. வைரலாகும் ஃபோட்டோ..
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.
அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.
கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் ஆடிய நடன வீடியோ காட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன. மணமக்களின் குடும்பத்தினர் & நண்பர்கள் பாடல்களை பாடி ஆடும் இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Also Read | சந்தானம் நடிக்கும் 'AGENT கண்ணாயிரம்'.. வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு! ரிலீஸ் எப்போ?