பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது, பி.அருமைச்சந்திரன் தயாரித்து, டி. ரங்கநாதன் இயக்கியுள்ள படம் 'ப்ளூவேல்'.
ஒரு கட்டத்தில் மிகவும் திகிலான கேமாக இருந்த ஒரு கேம்தான் ப்ளூவேல். இளைஞர்களையும், பதின்பருவ சிறுவர்களையும், மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி பலரையும் பைத்தியமாக்கும் இந்த கேம் பலரின் உயிர்களை பலி கொடுத்தது. அந்த அளவுக்கு திகிலான இந்த கேம் பற்றிய செய்திகள் முன்னதாக வரும்போது, அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.
உலக அளவுக்கு இந்த கேம் பிரபலமானது. இதனை அடுத்து மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பின்னர் இந்த கேம் தடை செய்யப்பட்டது. இதுபோன்ற கேம்கள் எப்படி இளைஞர்களை பாதிக்கின்றன என்பதற்கான விழிப்புணர்வு படமாக பூர்ணா நடித்த இந்த ப்ளூவேல் கேம் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த ரங்கநாதன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பூர்ணா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ப்ளூவேல் கேமின் ஆபத்துகள் குறித்தும், இதுபோன்ற கேம்களில் ஆர்வம் காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.
நடிகை பூர்ணா, அண்மையில் மணிரத்னம் மற்றும் ஜெயந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகி நெட்ஃபிளிக்ஸில் வெளியான நவரசா திரைப்பட தொகுப்பில் நடித்திருந்தார்.
கார்த்திக் நரேன் இயக்கியிருந்த ப்ராஜெக்ட் அக்னி எனும் இந்த திரைப்படத்தில், அரவிந்த்சாமியின் மனைவி கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்திருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா நடித்திருந்த இந்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் ஹை கான்செப்ட் வகையறாவில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.