தனது குழந்தை & கணவர் குறித்து விஸ்வரூபம் நடிகை பூஜா குமார் பகிர்ந்த மகிழ்ச்சியான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா குமார், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பாராசூட்டில் இருந்து Cute ah குதித்த நஸ்ரியா.. த்ரில் தருணம்! வைரலாகும் SKY DIVE போட்டோஸ்!

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை பூஜா குமார். 1997ல் ஆரம்பித்து 2000 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த "விஸ்வரூபம்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  அதன் பின்னர் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடித்த 'பி எஸ் வி கருட வேகா' படத்தில் நடித்ததன் மூலம் பரிச்சயமானவர். 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான அழகி போட்டியில் பட்டம் சூடியவர். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி படமான அஞ்சானா அஞ்சானி படத்திலும் பூஜா குமார் நடித்துள்ளார்.

பூஜா குமார்,அமெரிக்காவில் Man on a Ledge, Brawl in Cell Block 99, Bollywood Hero, Flavors, Hiding Divya, Park Sharks, Bollywood Beats, Night of Henna, Anything for You, Drawing with Chalk & Knots Urbane ஆகிய படங்கள் & டிவி நிகழ்ச்சி தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகை பூஜா குமார், விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நவ்யா ஜோஷி என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை பூஜா குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனது கணவர் & குழந்தையின் போட்டோவை பகிர்ந்து "என் சிறிய அழகான பெண் தன் அப்பாவை போல இருக்க விரும்புகிறாள்!" என கூறியுள்ளார்.

 

Also Read | இந்த வருட தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் லிஸ்ட்! ஒரு பார்வை

Pooja Kumar Shared Her Family Photo on Instagram

People looking for online information on Pooja Kumar, Pooja Kumar Shared Her Family Photo will find this news story useful.