இவங்க தான் பூஜா ஹெக்டே தங்கச்சியா? அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட சூப்பர் டூர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே அமெரிக்காவில் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மனைவி நஸ்ரியாவோடு பிறந்தநாள் கொண்டாடிய பஹத் பாசில்! நஸ்ரியா சொன்ன வாழ்த்து தான் ஹைலைட்டே!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கபி எய்த் கபி திவாளி" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியன் ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

நடிகை பூஜா ஹெக்டே, தற்போது ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளதாக ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றார். பேங்காக் கடற்கரையில் இருந்து பிகினி புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதன் பின்னர் நடிகை பூஜா ஹெக்டே இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இங்கிலாந்தில் எடுத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இங்கிலாந்தை தொடர்ந்து அடுத்த நாடாக அமெரிக்கா செல்வதாக சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதன் படி தற்போது அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரத்திற்கு சென்று அங்கிருந்து புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பூஜா ஹெக்டே தனது தங்கை பூமி ஷெட்டியுடன் உணவகத்தில் உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

மேலும் தங்கையுடன் ராட்டினம் சுற்றும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். காரில் இருந்து சில புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். அதில் P எழுத்து பொறித்த சங்கிலி அணிந்து தோறறமளிக்கிறார்.

 

Also Read | துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடித்த சீதா ராமம்.. மூன்று நாளில் இம்புட்டு வசூலா! செம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde with Her sister Bhumi Shetty in Newyork

People looking for online information on Bhumi Shetty, Newyork, Pooja Hegde, Pooja Hegde with Her sister will find this news story useful.