சொந்த ஊரில் ஊர் சுற்றிய பூஜா ஹெக்டே.. கடலில் பயணம் செய்த வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே, தமது சொந்த ஊரில் ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Pooja Hegde Roaming around on Mumbai Arabian sea
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | THALAIVAR170: ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் ரஜினி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட  இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 22.6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சில மாதங்களுக்கு முன் நடிகை பூஜா ஹெக்டே,  வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்", தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படம் என பல படங்களை பூஜா ஹெக்டே கைவசம் வைத்துள்ளார். இதில் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்" படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமது பிறந்த ஊரான மும்பை நகரில் ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் மும்பை தாஜ் மஹால் ஹோட்டல் & இந்தியா கேட் அருகில் உள்ள அரபிக் கடலில் பயணம் செய்யும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "Home ❤" என்ற தலைப்பில் இந்த புகைப்படங்களை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கார் பயணம்.. பார்த்திபன் பகிர்ந்த THROWBACK சம்பவம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde Roaming around on Mumbai Arabian sea

People looking for online information on Mumbai Arabian sea, Pooja Hegde will find this news story useful.