காலில் காயம்.. சிகிச்சை எடுக்கும் பூஜா ஹெக்டே.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | KAMAL HAASAN : இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டர்.. இது ஆண்டவர் BIRTHDAY ஸ்பெஷல்!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்", தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படம் என பல படங்களை பூஜா ஹெக்டே கைவசம் வைத்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் காயத்துடன் கட்டுபோட்ட புகைப்படத்தை பூஜா ஹெக்டே வெளியிட்டு இருந்தார். அதில் இடது காலில் தசை நார் கிழிந்து விட்டது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.  பெரிய வாலியில் காலை உள் வைத்து அமர்ந்து இருப்பது போல புகைப்படம் அமைந்துள்ளது. மேலும் நடக்க உதவும் தாங்கியின் புகைப்படத்தையும் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | தளபதி விஜய் கூட ஒரு படம்..? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் வைரல் பதில்.!

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde Latest Instagram Post about Ligament Injury Treatment

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde Latest Instagram Post will find this news story useful.